கொழும்பின் பிரபல தமிழ்பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு, தெமட்டகொடை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரை உடனடியாக மாற்றக்கோரி ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு, தெமட்டகொடை விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்' புத்தகம் சுமக்கும் எமது பிள்ளைகளின் வலியை உணர்ந்து பார்", ' ஆளுமைக்கு அனுபவம் தேவையா " , ' உனக்கு முடியாததை மற்றையவர்கள் செய்யும் போது விட்டுக்கொடு" , ' நேர அட்டவணையை தினமும் மாற்றாதே" , ' வெறுமனே பட்டத்தையும் சும்மா இருந்து கிடைத்த அனுபவத்தையும் வைத்து மாணவர்களை கொலை செய்யாதே"

' அப்பாவி மாணவர்களின் கல்வியை கெடுக்காதே", ' எங்கள் அதிபர் லலிதா அவர்களை நிரந்தரமாக்கு" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்நியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.