இலங்கையில் ஜனவரி முதல் இதற்கு தடை?

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கையில் லன்ஷீட் முற்றுமுழுதாக பாவனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி மேலும் பல பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அடுத்தவருடத்திலிருந்து தடை விதிக்கப்படும் என்றும்

அம்பாந்தோட்டையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் காலத்தில் பூர்த்திசெய்யப்பட்ட ஆடை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க உத்தேசித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.