வவுனியாவில் பரபரப்பு; பெரும் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலங்கள்!

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் தலையில் பெரும் வெட்டுக்காயங்களுடன் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்க வளவு பகுதியில் மீட்கப்பட்டன.

அத்துடன் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான 40 வயதுடைய (4 பிள்ளைகளின் தந்தை), மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த 34 வயதுடைய ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்

சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் மாணிக்கர் வளவில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற வவுனியா நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.