யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில், டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் 36 வயதுடைய கருனாரட்ணம் கருனானந்தன் எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியில் குறித்த குடும்பஸ்தர் உயரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.