இயக்கச்சியில் இராணுவச் சிப்பாய் தற்கொலை?

கிளிநொச்சி இயக்கச்சி படை முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சி கெமுனு வோச் படைப் பிரிவில் கடமை புரிந்த இரத்தினபுரியை சேர்ந்த சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாய் பெண் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் இராணுவச் சிப்பாயுடன் தொடர்பை துண்டித்ததனால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது