ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு: மகிழ்ச்சியில் கிராமவாசிகள்

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற “கிராமங்களுடனான ஜனாதிபதியின் உறவாடல்” முதலாவது நிகழ்ச்சியின் போது, பொது மக்களால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த நடவடிக்கைகள் சரிவர செயற்படுத்தப்படுகின்றனவா என்பதனைக் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்திற்கு உள்ள ஒரே பாதையைக் காபட் செய்தல், பாடசாலை கட்டிடத்தைக் புதுப்பித்தல் மற்றும் காட்டு யானைகளால் அழிக்கப்பட்ட வீடு ஒன்றை மீண்டும் கட்டுவது போன்ற வேலைப்பாடுகளும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும்,குறித்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் ஜனாதிபதி பங்கேற்ற முதல் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களால் குறித்த பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.