யாழ் புன்னாலைகட்டுவனில் முதியவர் மீது வாள்வெட்டு; ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் முதியவர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த முதியவரின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.