கேகாலையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கம்

கேகாலை மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பளார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கன பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எனினும் ரம்புக்கன மற்றும் சமந்தகம பகுதிகள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பத்மகுமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் மினுவாங்கொடவில் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டமையினை தொடர்ந்து 15 நோயாளிகள் மட்டுமே குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.