புதுமண தம்பதியினர் எடுத்த விநோதமாக புகைப்படங்கள்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

லக்ஷ்மி என்னிடம் வழக்கமாக எடுக்கும் போட்டோஷூட் போன்று இல்லாமால் விநோதமாக நடத்தலாம் என்று கூறியதால் இதுப்போன்று எடுத்தோம் என்று ரிஷி கூறியுள்ளார்.

திருமணம் முடிந்த புதுமண தம்பதியனர் தங்களது இனிமையான பந்தத்தை நினைவில் வைத்து கொள்ள போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.

இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாதளங்களில் தங்களுக்கு பிடித்தது போல் மார்டன், மார்டனாக போட்டோஷூட் நடத்தி இல்லற வாழ்க்கையை இனிமையாக தொடங்குவார்கள்.

கேரளாவில் தம்பதியனர் ஒருவர் வழக்கம் போல் இல்லாமல் சற்று மாறுதலாக இருக்க வேண்டுமென விநோதமாக நடத்திய போட்டோஷூட் ஒன்று நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.


கேரளாவில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ரிஷி கார்த்திகேயன் - லட்சுமி ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட் ஒன்றை நடத்த அவர்கள் இடுக்கியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் தம்பதியனர் தங்களது உறவை நெருக்கமாக காட்டுவிதமாக அவர்கள் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

தம்பதியனர் வெள்ளைத் துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இந்த புகைப்டங்கள் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் உள்ளதாக பலர் இதனை டிரோல் செய்துள்ளனர்.

இந்த போட்டோஷூட் குறித்து லக்ஷ்மி கூறுகையில், இணையத்தில் பலர் என்னை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளனர். என் குடும்பத்தையும் திட்டி உள்ளனர்.

சிலர் நீங்கள் உள்ளே ஆடை போட்டு இருக்கீறார்களா என்று கேள்வி கேட்டு உள்ளனர்.

என் நண்பர்கள், உறவினர்கள் கூட இந்த புகைப்படங்களை இணையத்தில் நீக்கிவிட்டு, தனியாக வைத்து கொள்ளுமாறு கூறினார்கள் என்றார்.

இந்த போட்டோஷட்டிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தம்பதியனர் இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இதுவரை நீக்காமல் உள்ளனர்.

இதுப்போன்று போட்டோஷூட் நடத்த புகைப்பட கலைஞர் தான் ஐடியா கொடுத்தார் என்றார் ரிஷி கார்த்திகேயன் கூறியுள்ளார்.

லக்ஷ்மி என்னிடம் வழக்கமாக எடுக்கும் போட்டோஷூட் போன்று இல்லாமால் விநோதமாக நடத்தலாம் என்று கூறியதால் இதுப்போன்று எடுத்தோம் என்று ரிஷி கூறியுள்ளார்.

என்ன தான் விநோதமான போட்டோஷூட்டாக இருந்தாலும் ஒரு லிமிட் வேண்டாமா என்பது தான் நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.