பிரபல தனியார் வைத்தியசாலையில் கொரோனா; மக்களே அவதானம்

இலங்கையிலுள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலை ஒன்றின் ஆய்வுக்கூடத்தில் உள்ள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் சுகாதார தொழிற்துறையாயளர்களின் சங்கத் தலைவரான ரவி குமுதேஸ் தெரிவித்தார்.

குறித்த உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை அடுத்து அந்த வைத்தியசாலை நிர்வாகம் பி.சி.ஆர் பரிசோதனையை நடத்தியதில் சிலருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்து மக்களை எச்சரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.