யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி - இராஜகிராமம் ஆகியவற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,குறித்த பிரதேசத்தை முடக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக அறிய கிடைக்கின்றது.
இராஜகிராமத்தில் 70 குடும்பங்களுக்கும் மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்றிரவு தனிமைப்படுத்தப்படலாம். என கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று தொற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் யாழ்.பலாலி வடக்கில் மரண சடங்கு ஒன்றில் கலந்துகொண்டிருந்த கூறப்படுகின்றது.
இதனையடுத்து, மரண சடங்கு நடைபெற்ற வீடு மற்றும் சுற்றாடலில் உள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.