பெரும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம்! கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம்

யாழ்ப்பாணத்தில் பேருந்து சாரதிகள், நடந்துனர்கள் செயற்பாடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு ஒவ்வொரு நாளும் அரசாங்கம் அறிவித்து வருகிறது.

கொரோவை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் பெரும்பாலான பேருந்துகளில் எந்தவித சுகாதார கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னைய காலங்கள் போன்றே மிகவும் நெருக்கமான வகையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.

மினுவாங்கொட, பேலியகொட மீன்சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணி நாடு முழுவதும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொத்தணியுடன் தொடர்புடைய பலர் யாழ்ப்பாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பேருந்து சாரதி, நடந்துநர்களின் செயற்பாடு, யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொத்தணியை உருவாக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.