மருத்துவமனையில் கொரோனா நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் மரணம்?

குருநாகல் – மாரவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 61 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்த பரிசோதனைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

தங்கொட்டுவ – மெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த 26ஆம் திகதி இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா சார்ந்த அறிகுறிகள் தென்பட்ட போதிலும் நேற்று உயிரிழக்கும் வரை அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.