மஹிந்தவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது முதலாவது தனது உழைப்பில் கொள்வனவு செய்த மோட்டார் வாகனத்தை மீளவும் பெற்றுள்ளார்.

மஹிந்தவிடம் இருந்து மோட்டார் வாகனத்தை கொள்வனவு செய்த எஸ்.ஏ.அமரசிறியின் மகன் துமிந்த அமரசிறியினால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த மோட்டார் வாகனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

துமிந்த அமரசிறி ‘Duminda Bodykit’ என்ற பெயருடைய பிரபல வர்த்தகராகும்.

பிரதமர் மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் கோரிக்கைக்கமைய இவ்வாறு பியட் மோட்டார் வாகனம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் வாகனம் இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச மோட்டார் வாகன போட்டியில் வெற்றி பெற்ற ஒன்றாகும்.