கொழும்பில் மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்

கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதி மறு அறிவித்தல் வரை முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர் குடியிருப்பு, சாலமுல்ல மற்றும் விஜயபுர கிராம அலுவலகர் பிரிவுகள் என்பன நாளை 5 மணி தொடக்கம் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.