இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி

இலங்கையில் கொவிட் தொற்றினால் புதிதாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதனையடுத்து நாட்டில் உயிரிழந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

76 வயதான ஆண்ணொருவரும், 96 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22988 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் தொற்றால் பாதிக்கப்பட்ட 6225 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 16656 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.