குருணாகல், கொபேகனே பகுதியில் நேற்றிரவு சட்டவிரோத மணல் அகழ்வுப் பணிகளை தடுக்க சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோதமாக மணல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று சுற்றிவளைத்தனர்.
இதன்போது மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த டிப்பர் வானமொன்றை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் முயற்சித்தபோது, குறித்த டிப்பர் பொலிஸ் கான்ஸ்டபிளை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த 32 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சிறப்பு விசாரரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.