கண்டி வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கம்

கண்டி வைத்தியசாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி, குரல்வளை மற்றும் காது சம்பந்தமான சிகிச்சை பிரிவே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

அந்த பிரிவில் பணியாற்றும் 9 தாதியர்கள் உட்பட 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் சேவை வழமைபோல இடம்பெறுவதாக கூறப்படுகிறது.