சற்று முன்னர் மஹர சிறைச்சாலையில் பதற்றம்; துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மஹர சிறைச்சாலையில் கைதிகளிடையே சற்று முன்னர் அமைதியின்மை ஏற்பட்டதனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தில் கைதிகள் இருவர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலைக் கைதிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மற்றுமொரு குழுவினர் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ள நிலையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சூழ்நிலையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மஹர சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.