மீண்டும் முடக்கப்படும் அபாயத்தில் கொழும்பில் சில பகுதிகள்

கொரோனா பரவலை தடுப்பதற்காக கொழும்பில் சில பகுதிகளை மீண்டும் முடக்கம் செய்வதற்கு கோவிட் ஒழிப்பு பற்றிய செயலணியின் கவனம் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மட்டக்குளி உட்பட கொழும்பு வடக்கு மற்றும் புறக்கோட்டை உள்ளிட்ட மத்திய கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்கள் மீண்டும் முடக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறித்த பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மக்கள் சரிவர பின்பற்றப்படாமையே இதற்கான காரணம் என்பதை சிவில் உடைகளில் கண்காணித்துவரும் பாதுகாப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக மக்களிடையே மீண்டும் கோவிட் தொற்று பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.