யாழ் திருநெல்வேலி சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கையர்கள்

யாழ்.திருநெல்வேலி சந்தையில் பொங்கல் காலத்தில் வெடி வியாபாரத்திற்காக வருகை தந்திருந்த தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் நல்லுார் பிரதேசசபையினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லுார் சந்தை பூட்டப்பட்டிருக்கும் நிலையில் சந்தையை சூழ பலாலி வீதி மற்றும் ஆடியபாதம் வீதி பகுதிகளில் பொங்கல் வியாபாரம் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் தென்னிலைங்கையிலிருந்து வந்து யாழ்.மாவட்ட வியாபாரிகளுடன் இணைந்து சில வியாபாரிகள் வெடி மற்றும் பானை வியாபாரம் செய்துவருவதாக நல்லார் பிரதேசசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பொலிஸாருடன் இணைந்து நடத்திய சோதனையில் 3 நாட்களுக்குள் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து வைத்திருக்காத அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், அது குறித்து பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் பிரதேசசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.