கொரோனா தொற்றால் மூடப்பட்ட பல்கலைக்கழகம்

கொரோனா அச்சுறுத்தலினால் அநுராதபுரத்திலுள்ள பிக்குகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நிதி அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அநுராதபுரம் பிக்குகள் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் யூ.டி.தொடம்வல தெரிவித்தார்.

இதனையடுத்து, பல்கலைக்கழகம் வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.