இன்றும் 3 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 49ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது.