இலங்கையில் கோவிட் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் கண்டறியப்பட்ட கொரோனா?

கோவிட் சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சிஆர் பரிசோதனையில் அந்த சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றார்.

எனினும் சடலத்தை பொறுப்பேற்பதற்கு அவரது உறவினர்கள் முன்வராத நிலையில், தொடர்ந்து உடல் குளிரூட்டப்பட்ட சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடலம் 29 நாட்கள் அந்த உடல் அங்கேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலத்தை தகனம் செய்ய சுகாதார பணியாளர்கள் பெற்றபோது பி.சி.ஆர் பரிசோதகையொன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போதே குறித்த உடலில் கொரோனா தொற்று அப்போதும் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.