சிங்களத்தில் வழங்கப்பட்ட தண்டப்பத்திரம்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாகன தண்டப்பத்திரம் தனது தாய்மொழியான தமிழில் தரப்படவில்லையென சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்காமல், சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள கையளித்துள்ளது.

இந்த சம்பவம் மாங்குளம் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவருக்கு போக்குவரத்து குற்றத்திற்கான தண்டப்பத்திரத்தை மாங்குளம் பொலிசார் சிங்களத்தில் வழங்கியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனது தாய்மொழியான தமிழில் தண்டப்பத்திரம் வழங்கப்படவில்லையென குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சிங்களத்தில் தண்டப்பத்திரம் வழங்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.