இலங்கையில் இடம்பெற்ற பதறவைத்த சம்பவம்; ஆறு பிள்ளைகளின் தாயொருவரின் விபரீத முடிவு

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஹட்டனில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயான 72 வயதுடைய எஸ் மாரியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

வீட்டில் ஏற்றபட்ட தகராறு காரணமாகவே ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி சென்ற இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் சிரேஸ்ட மரண பரிசோதகர் ஏ.ஜே.எம். பஷீர் முகமட் தெரிவித்தார் .

ஹட்டன் இரயில் நிலையத்திற்கும் ரொசல்ல இரயில் நிலையத்திற்கும் இடையிலான மல்லியப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் சிதறிக்கிடந்த உடற் பாகங்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.