கிளிநொச்சி வளாக புத்த விகாரைக்கு சேதம்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த 8ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் மீண்டும் தூபியை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.