மீசாலையில் மேச்சலுக்கு மாட்டை கொண்டு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம்- மீசாலை பகுதியில் மேய்ச்சலுக்கு மாட்டை கொண்டு சென்றவர், பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

மீசாலை தெற்கை சேர்ந்த யோ.குமார் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், நேற்றைய தினம் சரசாலை பகுதியில் தமது மாட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவேளை புற்புதருக்குள் இருந்த பாம்பொன்று அவரை தீண்டியுள்ளது.

அதனை அறியாத அவர், மாலை வீடு திரும்பிய நிலையில் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டமையை அடுத்து உறவினர்கள் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கபட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.