பிள்ளையான் அபகரித்த வீடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் அடாத்தாக அபகரிக்கப்பட்டிருந்த வீடு மட்டும் காணியை உரியவரிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளரான அருண் தம்பிமுத்து வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், அவருக்கு உரித்தான குறித்த வீட்டினை பிள்ளையான் அடாத்தாக கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவருக்கு சார்பாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

1893ம் ஆண்டு நீதிமன்ற பிஸ்கால் மூலம் கந்தப்பர் முத்தையாவால் கொள்வானவு செய்யப்பட்ட (128 வருட வறலாற்றைக் கொண்ட) காணி அவரது மகன் வழி மகள் மூலமாக அருண் தம்பிமுத்துக்கு உரித்தான காணியை அடாத்தாக பிடித்து பிள்ளையானால் அபகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று அருண் தம்பிமுத்துக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.