முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு

முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்டும் இறுதி நேரத்தில், மணப்பெண் தாலியினை தட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.

கேப்பாபிலவினை சேந்த பெண் ஒருவருக்கும் முள்ளியவளை நாவல் காட்டினை சேர்ந்த இளைஞனுக்கும் வற்றாப்பளை அம்மன் கோவிலில் தாலி கட்ட இரு குடும்பத்தினராலும் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மூகூர்த்த நேரத்தில் ஜயர் தாலியினை எடுத்து மணமகனின் கையில் கொடுக்க முற்பட்ட போது திருமணத்தில் விருப்பம் இல்லை. என மணப்பெண் அந்த இடத்தில் இருந்து உதாசீனம் செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் மணப்பெண்ணினை பல பெரியவர்கள் சமரசம் செய்ய முயற்சித்த போதும் இணங்காத நிலையில் மாப்பிளையும் மாப்பிளை வீட்டாரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், மணமகள் எழுந்து சென்றமைக்கான காரணம் வெளியாகவில்லை.