கி.பி.630ம் வருடத்தில் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம்; எங்குள்ளது தெரியுமா?

கி.பி.630ம் வருடத்தில் மஹேந்திரவர்ம பல்லவ மன்னனால் கற்பாறை மேல் கட்டப்பட்ட சிவன் ஆலயம் தமிழ் நாட்டில் உள்ளது.

இத்திருக்கோலியானது சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் உள்ளது.

இந்த மூர்த்தியின் திருப்பெயர் ஓலக்கண்ணேஷ்வரன் என்பதாகும்.

இந்த ஆலயத்திலிருந்து ஒளிரும் ஒளியானது அக்காலத்தில் கடலில் பயணம் செய்தக் கப்பல்களுக்கு இரவு நேரத்தில் கலங்கரை விளக்கமாக வழிகாட்டியுள்ளமை சிறப்பம்க்ஷம் ஆகும்.

அத்துடன் ஆசியாவின் பழமையான கலங்கரை விளக்கம் இதுதான் என்றும் சொல்லப்படுகின்றது.

நமது நாட்டிலும் கூட தமிழர் வரலாற்றினை பறைசாற்றும் பல புராதன இடங்களும் ஆலயங்களும் உள்ளன.

எனினும் சமீபகாலங்களாக தொல்லியல் திணைக்களத்தினால் அவை அபகரிக்கப்பட்டு வருகின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்த்யுள்ளது.