யாழ் கொக்குவிலில் பிரான்ஸில் இருந்து வந்து தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட 60 வயதான நபரொருவர் கடந்த ஒரு வருடமாக தனது சொந்த இடமான கொக்குவிலில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் மீளவும் பிரான்ஸ் செல்வதற்காக கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்த தனியார் வாகனம் ஒன்றில், மேலும் சிலருடன் கொழும்பு சென்றுள்ளார்.
இதன்போது விமானத்தில் பயணிப்பதற்கு பிசிஆர் அறிக்கை தேவைப்பட்டதால், 21ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டார்.
அதன் முடிவு நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் யாழ் நகரம், திருநெல்வேலி உட்பட பல இடங்களிற்கும் சென்று வந்தமை தெரிய வந்ததையடுத்து, அவர் சென்று வந்த இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.