மட்டக்களப்பில் எட்டு வயது சிறுவனிற்கு எமனான ஊஞ்சல்

மட்டக்களப்பில் எட்டு வயது சிறுவன் ஒருவன் ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மனோகரன் கேதீசன் என்னும் எட்டு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் தாயார், மாடுகளை மேய்ப்பதற்காக கொண்டுச் சென்று வீட்டுக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவனை தேடியபோது, சீலையில் சிக்குண்ட நிலையில் இருந்தவரை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

எனினும் குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலையின் கடமை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன்

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.