விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.