தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இன்று காலை நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.