இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறுவாரா கோஹ்லி?

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி இலங்கை தொடரிலிருந்து ஓய்வை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு அனுமதி வழங்கப்படின், ஒரு டெஸ்ட், ஒருநாள் தொடர் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளில் இந்திய அணி கோஹ்லியின் தலைமையின்றி இலங்கையை எதிர்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் டிசம்பர் 24ஆம் திகதிவரை மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடவுள்ளன.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, டிசம்பர் மாத போட்டிகளில் பங்குபற்றுவது கடினம் என கோஹ்லி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அறிவித்துள்ளார்.

கோஹ்லி, அண்மைக் காலமாக தொடர்ந்து விளையாடி வருகின்ற நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்காக இவ் ஓய்வை கோரியுள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.