கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்த ஆட்டமிழப்பு

கிரிக்கெட் போட்டியொன்றில் வழங்கப்பட்ட ஆட்டமிழப்பொன்று தற்போது சமுகவலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.

இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங் காணொளியொன்றை இன்ஸ்ராகிராமில் பகிர்ந்து, “இப்படி ஒரு ஆட்டமிழப்பை வாழ்நாளில் பார்த்ததில்லை” என குறிப்பிட்டுள்ளார்.குறித்த காணொளியில் துடுப்பாட்ட வீரர் பந்தை எதிர்கொள்கிறார். பந்து துடுப்பாட்ட மட்டைக்கு படமால் விக்கட் காப்பாளரிடம் செல்கிறது.

பந்துக்கும், துடுப்பாட்ட மட்டைக்கும் இடையில் பாரிய இடைவெளியும் இருந்தது. ஆனால் நடுவர் ஆட்டமிழப்பு என அறிவிக்க, துடுப்பாட்ட வீரரும் மைதானத்தை விட்டு வெளியேருகின்றார்.

இந்த காணொளியை பார்த்த யுவராஜ் சிங் குழம்பிப்போய் இதனை இன்ஸ்ராகிராமில் பகிர்ந்துள்ளார்.இதனை தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் யுவராஜின் குழப்பத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதில் குறித்த போட்டி தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேர்ப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் துடுப்பாட்ட வீரரின் மட்டையில் இரண்டு பந்துகள் படாத பட்சத்தில் ஆட்டமிழப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு, யுவராஜின் குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளார்.