எட்டு இடங்களில் குத்திக்கொண்ட விராட் கோலி: வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!!

உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும்.

விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். உடலில் பல இடங்களில் டாட்டூ வரைந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் டாட்டூ கடையில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

அவரது உடலில் ஏற்கெனவே விதவிதமான டாட்டூக்கள் இடம்பெற்றுள்ளன அண்மையில் மும்பை பாந்த்ராவில் உள்ள ஏலியன்ஸ் டாட்டூ எனும் கடைக்குச் சென்ற கோலி, அங்கு புதிய டாட்டூ வரைந்து கொண்டார்.சிவன் கைலாய மலையில் தவம் செய்யும் உருவம், அதன் பின்புலத்தில், மானஸரோவர் மலையும் டாட்டூவாக அவர் மீது உள்ளது.

அடுத்து தனது அம்மா அப்பாவின் பெயர்களை பச்சை குத்தியிருக்கிறார். இன்னுமொரு டாட்டூவில் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஜெர்சி எண்ணை பதிய வைத்துள்ளார்.கோல்டன் ட்ராகன், ஸ்கார்பியோ, சாமுராய் வீரன் என இதுவரை எட்டு டாட்டூக்களை தனது உடலில் வரைந்துள்ளார்.