முஸ்லீம் அமைச்சரின் அலுவலகத்தில் ஒருவர் கைது!

அமைச்சர் பைசர் காசிமின் அமைச்சு அலுவலகத்தில் இருந்து நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சின் காரியலத்தில் வைத்து நேற்று மாலை இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது தொடர்பாக பைசர் காசிம் தரப்பில் குறிப்பிட்டபோது, கைதானவர் அமைச்சருடனோ, அமைச்சிலோ தொடர்பில் இல்லாதவர் என்றும், அமைச்சரின் ஊடக செயலாளரிடம் அடிக்கடி வந்து வேலை கோருபவர் என்றும் தெரிவித்தனர்.

கைதானவர் மாவனல்ல பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.