இந்திய மீனவர்கள் 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ். ஊர்காவற்துறை நீதிவான் யூட்சன் முன்னிலையில் இன்று எடுத்துகொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரையும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக திருப்பி அனுப்புமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவு பெரும் கடற்பரப்பில் அத்துமீறி மீட்பிடியில் ஈடுபட்டபோது கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை தமிழகம் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட்டுள்ளனர்.