ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவர் செய்த மோசடி -கைதுசெய்தபொலிஸார்

தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 225,000 ரூபா பண மோசடி செய்த சந்தேக நபரை நேற்றையதினம் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தின் கடிதம், பிரதமரின் கடிதம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, குறித்த நபர் பணம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் இலங்கை பேருந்து சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறி, இது போன்ற போலியான ஆவணங்களை தாமே தயாரித்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ப்திவுசெய்யப்பட்டிருந்தது.

அதற்கு அமைய ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைபடுத்தபட உள்ளதாக, தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.