மதவாச்சி விகாராதிபதி கைது ! என்ன செய்தார் தெரியுமா?

பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பௌத்த மதகுரு கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது.

குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்தே மதகுரு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதகுருவை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது , நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மதகுருவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.