ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு-குற்றப்பத்திரம் தாக்கல்

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மீது சட்டமா அதிபர் இன்று குற்றப்பத்திரம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்லது.

இத்தகவலை , சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றப்பத்திரம் கம்பஹா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு நபர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 450 (4) ஐ மீறுவது உட்பட 94 எண்ணிக்கையின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சட்டமாஅதிபர் தப்புல டி லிவேரா முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் பிரிகேடியர் அனுரா தேசபிரியா குணவர்தன, திங்கிரி அருணகே சிறிசேன, ஜெயசுந்தர முதியன்சலேஜ் திலகரத்ன, மற்றும் லலித் கிரே ஆகிய இராணுவ அதிகாரிகள் பிரதிவாதிகளாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

ரத்துபஸ்வல பகுதியில் குடிதண்ணீரை மாசுபடுத்துவதாகக் கூறப்பட்ட வெனிகிரோஸ் (பிரைவேட்) லிமிடெட் மூடப்பட வேண்டும் என்று கோரி, கடந்த 2013 ஓகஸ்ட் 1ம் திகதி பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததோடு , 45 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.