சி.ஐ.டி இன் கீழ் கொண்டுவரப்படவுள்ளது எஃப்.சி.ஐ.டி

நிதிக் குற்ற புலனாய்வு பிரிவு (எஃப்.சி.ஐ.டி) குற்றப் புலனாய்வுத் துறையின் (சி.ஐ.டி) கீழ் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவலை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாற்றம் பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின்படி இடம்பெறுகிறது.

இதேவேளை நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களை மோசடி செய்வது தொடர்பான விசாரணைகளிற்காக கடந்த அரசாங்கத்தால் 2015ம் ஆண்டு நிதிக்குற்ற புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.