பேஸ்புக் காதல்! முதல் நாள் சந்திப்பிலேயே என்ன நடந்திச்சு தெரியுமா....

பேஸ்புக் ஊடாக சந்தித்த காதலியை சந்தித்த முதல் நாளிலேயே கொலை செய்த காதல் தொடர்பில் சர்வதேச ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து நாட்டில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 22 வயதுடைய யுவதியே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய காதலன், இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பேஸ்புக்கில் குறித்த யுவதியுடன் தொடர்பு ஏற்படுத்தி குறுந்தகவல்களை பரிமாறியுள்ளார்.

பின்னர், இருவரும் நேரில் சந்திக்க தீர்மானித்துள்ளதையடுத்து, 2 மணித்தியாலங்கள் பயணித்த காதலன், காதலியின் இருப்பிடத்துக்கு சென்றுள்ளார்.

தனது அழிநன மோட்டார் சைக்கிளில் அவர் பயணித்துள்ளார்.இருவரும் சந்தித்ததையடுத்து, அங்குள்ள ஹோட்டலில் அறையொன்றை வாடகைக்கு எடுக்க தீர்மானித்த போதும், அதற்கான பணம் அவர்களிடம் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அருகில் இருந்த இறப்பர் தோட்டத்துக்குள் காதலனும் காதலியும் சென்று பாலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

தன்னை திருப்திப்படுத்தும் அளவுக்கு உன்னிடம் சக்தியில்லை என காதலனிடம் காதலி தெரிவித்துள்ளார்.

யுவதியின் பேச்சால் கடும் கோபத்துக்குள்ளான இளைஞன் யுவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகிலிருந்து ஆற்றுக்குள் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலை, ஆற்றில் மிதந்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது, அருகிலிருந்த சி.சி.டிவி கமெராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இளைஞன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.