கிளிநொச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறீதரனின் புகைப்படம் அதிரடியாக நீக்கம்

கிளிநொச்சி நகரில் பதாதையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஒளிப்படம் நீக்கப்பட்டமை தொடர்பாக பதாதைகளை வடிவமைத்தவர்களிடம், எமது பிராந்திய செய்தியாளர் தொடர்புகொண்டு வினவியபோதே, இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் உத்தரவுக்கு அமைவாகவே தாம் அவரின் படத்தை மறைத்து விட்டதாகவும் ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் வேண்டுகைக்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், கிளிநொச்சி புனித திரேசா தேவாலயத்தில் நான்கு மில்லியன் ரூபாய் செலவில் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இதன்போது விபரங்கள் அடங்கியதாக குறித்த அபிவிருத்தி திட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், தேவாலயத்திற்கு முன்பாக ஏ-9 பிரதான வீதியில் பதாதை அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த பதாதையில், அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஒளிப்படத்தை பெரிதாகவும், அதன் மேற்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் ஒளிப்படங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த பதாதையில் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் படம் திடீரென மறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களிடம் வினாவிய போது, அனைத்து அபிவிருத்திகளும் மக்களின் வரிப்பணத்திலேயே செய்யப்படுகின்றது ஆகவே அவ் அபிவிருத்தி திட்டங்களுக்கு எமது படங்களை போட்டு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆதலால் தான் என் அபிவிருத்தி திட்டங்களில் என் படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என்று கூறினேன் என தெரிவித்தார்.