சுவிஸில் கடுமையான விமர்சனத்தை வாங்கிக் கட்டும் ஈழத்தமிழ் ஜோடி...என்ன செய்தார்கள் தெரியுமா?

நமது பாரம்பரியப்படி திருமணம் என்றால் மணமகளின் கழுத்தில், மணமகன் தாலி கட்டுவதுதானே வழக்கம். ஆனால், தலைகீழ் மாற்றமொன்றை ஈழத்தமிழ் ஜோடியொன்று சுவிஸில் அரங்கேற்றியுள்ளது.

வழக்கங்களையும், பழைய மரபுகளையும் மீறி சில புரட்சிகரமான செயற்பாடுகள் நடப்பது வழக்கம்தான்.

ஆனால், இம்முறை நடந்தேறியுள்ள இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

வெளிநாட்டில் சென்றாலே சில ஈழத்தமிழர்கள் நம் பாரம்பரியங்களில் இருந்து மாறி வருகிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வே இங்கு நடந்துள்ளது.

சுவிஸ் நாட்டில் இந்த திருமணம் நடந்துள்ளது.அதாவது மணமகனிற்கு தாலி கட்டிய மணமகள், அந்த தாலியை முத்தமிட்டு வேறு கலகலப்பை மூட்டினார். அது தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சமுக ஆர்வலர்கள் பலரும் இதற்காக விமர்சனங்களை முன்வைத்திருப்பதோடு , நம் பாரம்பரியங்கள் உதாசீனப்படுத்தப்படுவதையிட்டு மிகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.