இத்தாலியில் 08 இலங்கையர்கள் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

இத்தாலியை கொடூரமாக பாதித்துள்ள கொரோனா வைரஸிற்கு அங்குள்ள இலங்கையர்கள் 08 பேர் பீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஒட்டுமொத்த இத்தாலியிலும் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் 50 பேர் வரையான இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீட்டிலிருந்தவாறே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

loading...