நாளை வெள்­ளிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணப் பல்­க­லை­யின் பொதுப் பட்­ட­ம­ளிப்பு விழா!

யாழ்ப்­பாணப் பல்­க­லைக் கழ­கத்­தின் 33 ஆவது பொதுப் பட்­ட­ம­ளிப்பு விழா­வின் முத­லா­வது அமர்வு நாளை 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணி முதல் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் இடம்­பெ­ற­வுள்­ளது. இரண்­டா­வது அமர்வு அடுத்­தாண்டு மார்ச் மாதம் நடத்­தப்­ப­டும்.

இவ்­வாறு யாழ். பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பேரா­சி­யர் இ.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்தார்.

33ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா­வின் முத­லா­வது அமர்வு தொடர்­பாக நேற்று யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­தில் நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்ததாவது:-

யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் 33 ஆவது பொதுப் பட்­ட­ம­ளிப்பு விழா இம்­முறை இரண்டு பகு­தி­க­ளாக நடத்­தப்­ப­ட­வுள்­ளன. முத­லா­வது பகுதி எதிர்­வ­ரும் 8 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை 9 மணி முதல் 5 அமர்­வு­க­ளாக நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த பட்­ட­ம­ளிப்பு விழா­வில் உயர் பட்­டப் படிப்­பு­கள் பீடம், முகா­மைத்­துவ வணிக பீடம், கலைப்­பீட சட்­டத்­துறை, விவ­சாய பீடம், மருத்­துவ பீடத்­தின் இணை மருத்­துவ அலகு, சித்த மருத்­து­வத் துறை, வவு­னியா வளா­கத்­தின் பிர­யோக விஞ்­ஞான பீடம், வணிக கற்­கை­கள் பீடம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 816 பட்­ட­தா­ரி­கள் பட்­டங்­க­ளைப் பெற­வுள்­ள­னர்.

உயர் பட்­டப் படிப்­பு­கள் பீடத்­தைச் சேர்ந்த ஒரு­வர் கலா­நிதிப் பட்­டத்­தை­யும், 64 பேர் பட்­டப்­பின் தகை­மை­க­ளை­யும், முகா­மைத்­துவ வணிக பீடத்­தைச் சேர்ந்த 293 பேர் வியா­பார நிர்வாக மாணி பட்­டத்­தை­யும், 48 பேர் வணி­க­மாணி பட்­டத்­தை­யும், கலைப்­பீட சட்­டத்­து­றை­யைச் சேர்ந்த 63 பேர் சட்­ட­மாணி பட்­டத்­தை­யும், விவ­சாய பீடத்­தைச் சேர்ந்த 53 பேர் விவ­சாய விஞ்­ஞா­ன­மாணி பட்­டத்­தை­யும், மருத்­துவ பீடத்­தின் இணை மருத்­துவ அல­கின் 58 பேர் மருத்­துவ ஆய்வு கூடத் தொழில் நுட்­பம், மருந்­தா­ளர், தாதி­யம் ஆகிய துறை­க­ளில் விஞ்­ஞா­ன­மானி பட்­டங்­க­ளை­யும், வவு­னியா வளா­கத்­தின் பிர­யோக விஞ்­ஞான பீடத்­தைச் சேர்ந்த 84 பேர் பிர­யோக விஞ்­ஞான மாணி பட்­டத்­தை­யும், வணிக கற்­கை­கள் பீடத்­தைச் சேர்ந்த 110 பேர் வணி­க­மானி பட்­டத்­தை­யும் 10 பேர் நேர­டி­யா­கப் பிர­சன்­ன­மா­காத நிலை­யி­லும் பட்­டங்­க­ளைப் பெற­வுள்­ள­னர்.

எதிர்­வ­ரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள 33 ஆவது பொது பட்­ட­ம­ளிப்பு விழா­வின் இரண்­டா­வது பகு­தி­யில் விஞ்­ஞான பீடம், பொறி­யி­யல் பீடம், மருத்­துவ பீடம், கலைப்­பீ­டம், மற்­றும் உயர்­பட்­டப் படிப்­பு­கள் பீடங்­க­ளைச் சேர்ந்த பட்­ட­தா­ரி­க­ளுக்கு பட்­டங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­து­டன், வெளி­வா­ரி­யா­கப் பட்­டம் பெறு­ப­வர்­க­ளின் பட்­டங்­க­ளும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன– என்­றார்.

நாளை நடை­பெ­ற­வுள்ள ஐந்து அமர்­வு­க­ளில் முத­லாம் அமர்வு காலை 9 மணிக்­கும், இரண்­டா­வது அமர்வு காலை 10.45 க்கும், மூன்­றா­வது அமர்வு மதி­யம் 1.15 க்கும், நான்­கா­வது அமர்வு பி.ப 3 மணிக்­கும், ஐந்­தா­வது அமர்வு மாலை 4.30 மணிக்­கும் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.