வரி எல்லையை மீறி ஆசிரியர்கள் வருமானம் ஈட்டுகின்றனர்!!

வரி செலுத்தாத தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்களை கண்டறிவதற்கு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் வரி செலுத்துவதில்லை என திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் நதுன் கமகே கூறியுள்ளார்.

வரி எல்லையை மீறி சில ஆசிரியர்கள் வருமானம் ஈட்டுவதாகவும், மாவட்ட செயலகங்களூடாக அவ்வாறான ஆசிரியர்களை இனங்கண்டு வரி ஆவணங்களை பரிசீலிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.ட்

இதேவேளை வரி, செலுத்துவது தொடர்பில் தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்களை தௌிவூட்டும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது 80 -20க்கு இடையில் காணப்படும் மறைமுக வரி மற்றும் வருமான வரி வீதத்தை 60-40 வீதமளவில் பேணுவதே இதன் இலக்காகும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.